Breaking News

இந்திய-நேபாள எல்லையில் பயங்கரவாதி கைது தொடர் குண்டுவெடிப்புகளில் 10 ஆண்டுகளாக தேடப்பட்டவர்


டெல்லி, ஆமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் 2007, 2008 ஆண்டுகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் 165 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு உதவியாக இருந்தவர், அரிஸ் கான் என்ற ஜூனைத் (வயது 32).

இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் வெடிகுண்டு தயாரித்து வந்தவர் இவர்தான் என சொல்லப்படுகிறது. இவருடைய தலைக்கு போலீசார் ரூ.15 லட்சம் விலை வைத்து தேடி வந்தனர். 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இவரை, இந்திய-நேபாள எல்லையில் டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இவர் கைது செய்யப்பட்டு இருப்பது போலீசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என டெல்லி போலீஸ் உயர் அதிகாரி பிரமோத் சிங் குஷ்வா தெரிவித்தார். 

source: Daily thanthi

கருத்துகள் இல்லை