Breaking News

வெறும் 125 இந்திய இராணுவ வீரர்கள் 2000 பாகிஸ்தானிய வீரர்களை எதிர்கொண்ட வீர வரலாற்றை அறிவீர்களா ???


வெறும் 125 இந்திய இராணுவ வீரர்கள் 2000 பாகிஸ்தானிய வீரர்களை எதிர்கொண்ட வீர வரலாற்றை அறிவீர்களா ???

 லாங்கேவாலா போர்


வெறும் 125 இந்திய இராணுவ வீரர்கள் 2000 பாகிஸ்தானிய இராணுவ வீரர்களை எதிர்கொண்ட வீர வரலாற்றை அறிவீர்களா ???

முன்னோட்டம்


ராஜஸ்தானில் உள்ள லாங்கேவாலா என்னும் இடத்தில நடைபெற்றது இந்த சரித்திர நிகழ்வு. இந்த லாங்கேவாலா போரே இந்தியா 1971 போரில் இல் பாகிஸ்தானை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்தது.

டிசம்பர் 3,1971 சரியாக 9 மணி இருக்கும், ராஜஸ்தானின் லாங்கேவாலா என்னும் இடத்தில் பாகிஸ்தான் தன்னுடைய 2000 இராணுவ வீரர்களோடு, 45 டாங்கிகளுடன்  இந்தியாவின் எல்லையில் நுழைந்தது. பாகிஸ்தானின் நோக்கம் என்ன வென்றால் காலைக்குள் லாங்கேவாலாவை கைப்பற்றி விட வேண்டும்,மதியத்திற்குள் ஜெய்சால்மர் மற்றும் இரவு ஜோத்பூர் ஆகிய நகரங்களை கைப்பற்றி விட வேண்டும் என்ற கனவோடு இந்திய எல்லைக்குள் நுழைந்தது. அப்பொழுது லாங்கேவாலா பஞ்சாப் ரெஜிமென்டின் 23 வது பட்டாலியனை சேர்ந்த “A” பிரிவு வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது.


அப்பொழுது லாங்கேவாலா பகுதியில் இந்திய வீரர்கள் வெறும் 120 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் அப்பொழுது இருந்தது ஒரே ஒரு ஜீப்பின் மீது பொருத்தப்பட்ட டாங்க் எதிர்ப்பு துப்பாக்கி மட்டுமே இருந்தது. அப்போது இவர்களிடம் டாங்கிகள் இல்லை, ஆர்டிலரிகள் இல்லை.அந்த நடுஇரவில் விமானப்படையும் உதவிக்கு வர இயலாது.ஏனெனில் அந்த நேரத்தில் இந்திய விமானப் படை விமானங்களில் இரவில் போர்புரிய உதவும் கருவிகள் இல்லாதிருந்தது.


அந்த 120 வீரர்களுக்கும் அப்போது மேஜர் குல்தீப் சிங் சந்த்புரி தலைமை ஏற்று முடிவு எடுத்தார்.அப்போது அவர்களிடம் இருந்தது இரண்டே வழி தான் ஒன்று புறமுதுகு காட்டி ஓடி விட வேண்டும். மற்றொன்று இங்கேயே இருந்த அந்த பாகிஸ்தானிய வீரர்களை நேருக்கு நேர் சந்தித்து காலையில் உதவி கிடைக்கும் வரை போராடி வீர மரணம் அடைய வேண்டும். நம் வீரர்கள் எந்த வழியை தேர்ந்து எடுத்திருப்பார்கள் என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.. 



ஆம் நம் வீரர்கள் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழியைத்தான். நேருக்கு நேர் போராடுவது தான்.நம் வீரர்களுக்கு அப்போது எத்தனை பெரிய பாக் படை வருகிறது என அறிந்திருக்கவில்லை.நூறோ அல்லு ஐநூறோ அல்லது ஐந்தாயிரமோ என மேஜர் குல்திப் தனது வீரர்களிம் கூறினார்.அங்கு இருந்த 120 வீரர்களும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.அவர்கள் போர் புரிய தயாராயினர். வீரர்களின் நோக்கம் காலை வரை பாக் படைகளுடன் போரிட்டு அவர்களை மேற்கொண்டு நகரவிடாமல் செய்ய வேண்டும்.இவ்வாறு தாக்குப்பிடித்தால் காலையில் விமானப் படை உதவி பெறலாம் என்பதே.

டிசம்பர் 4,1971 நடு இரவு 12.30 (AM) மணி இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவை தாக்க தொடங்கிறது.பாகிஸ்தான் மூன்று திசைகளில் இருந்து இந்திய வீரர்களை நோக்கி ஆர்டிலரிகளாலும், டாங்கிகளாலும் குண்டு மழை பொழிந்தது. இந்தியாவின் 120  வீரர்களும் இந்த கடுமையான சூழ்நிலையிலும் தங்களது நம்பிக்கை இழக்காது வீரத்தோடும் போர் புரிந்தனர்.

அந்த நேரத்தில் அவர்களிடம் இருந்த  ஒரே ஒரு துப்பாக்கி பொருந்திய ஜீப்பை வைத்துக்கொண்டு பாகிஸ்தானின் இரண்டு டாங்கிகளை சிதறடித்தனர். துரதிஷ்டவசமாக நம்மிடம் இருந்த ஒரே ஒரு ஜீப்பும் பாகிஸ்தானின் ஆர்டிலரி தாக்குதலில் சிக்கி தீக்கிரையானது. தற்போது நம்மிடம் இருந்த ஒரே வழி நிலத்தில் பாகிஸ்தானின் டாங்கிகளுடன் நேருக்கு நேர் சண்டை இடுவது தான்.மேஜர் குல்தீப் சிங் ஒவ்வொரு பங்கருக்கும்  சென்று நம் வீரர்களை உற்சாகப்படுத்தியும்,ஊக்கப்படுத்தியும் வந்தார்.


இந்த தாக்குதலில் வெற்றி பெற பாகிஸ்தான் தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்தது. ஆனால் நம் வீரர்கள் வீரத்தோடு செயல்பட்டு பாகிஸ்தானின் 12 டாங்கிகளை சிதறடித்தனர். இரவிலும் பாகிஸ்தான் ஆக்ரோசத்தோடு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது.இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் அனைத்து போர் யுக்திகளையும் சிதறடித்தனர்.


இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு நம் விமானப்படையின் உதவி கிடைத்தது, H-24 MARUTS மற்றும் HAWKER HUNTER போன்ற இந்திய போர் விமானங்கள் தங்களது துப்பாக்கி மற்றும் ராக்கெட் தாக்குதலை தொடங்கின. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாகிஸ்தானிய படைகள் ஸ்தம்பித்துபோயின. மேலும் 22 பாகிஸ்தானிய டாங்கிகள் இந்திய விமானப்படையின் ராக்கெட் தாக்குதளுக்கு இரையாயின. இதைக்கண்ட பாகிஸ்தானிய படைகளுக்கு பயம் தொற்றிக்கொண்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாகிஸ்தானிய கமாண்டர் தன் படைகளை திரும்பி வரச்சொன்னார். உடனே பாகிஸ்தானிய படைகள் தலைதெறிக்க வந்த வழியே புறமுதுகு காட்டி ஓடின.


அடுத்த நாள் காலை இந்த போர் முடிவுக்கு வந்தது. இந்திய தரப்பில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், ஒரு ஜீப்புடன் துப்பாக்கி பொருந்திய வாகனத்தை நாம் இழந்தோம்.பாகிஸ்தான் தரப்பில் 200 வீரர்கள்,36 டாங்கிகள் மற்றும் 500 இதர வாகனங்களை பாகிஸ்தான் இழந்தது.


போரின் முடிவில் வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா பெற்றது.இந்த போருக்கு பிறகு பாகிஸ்தானிய கமாண்டர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த போரில் வீரத்துடன் ஈடுபட்ட இந்தியாவின் பல்வேறு இராணுவ வீரர்களுக்கு பல்வேறு உயரிய விருதுகளை கொடுத்து கொவ்ரவித்தது இந்திய அரசு.

இந்த லாங்கேவாலா வெற்றிக்கு காரணமாக இருந்த மேஜர் குல்தீப் சிங் சந்த்புரி அவர்களுக்கு மகாவீர் சக்ரா விருதை அளித்து பெருமைப்படுத்தியது இந்திய அரசு.


இந்த லாங்கேவாலா போரில் ஏற்ப்பட்ட வெற்றி தான் இந்தியா 1971 இல் பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த போரின் வெற்றிச் சரித்திரம் ஹிந்தி திரைப்படமான பார்டர் (BORDER) திரைப்படத்தில் கதையாக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அத்தனை வீரர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.. இவர்கள் தான் நம் நாட்டின் உண்மையான் ஹீரோக்கள்..

இந்த வெற்றிச் சரித்திரத்தை அனைவரும் அறிய share செய்யுங்கள்.ஜெய்ஹிந்த்.



கருத்துகள் இல்லை