Breaking News

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்கள் நடமாட்டம் என தகவல் – கண்காணிப்பு பணியில் 8 இந்திய போர்க் கப்பல்கள்


இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன துருப்புகள் நடமாட்டம் என தகவல் – கண்காணிப்பு பணியில் 8 இந்திய போர்க் கப்பல்கள்

இந்தியப் பெருங்கடலில் சீன போர்க் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக 8 போர்க் கப்பல்களை இந்தியக் கடற்படை நிலைநிறுத்தியுள்ளது.

மாலத்தீவில் நிலவும் அரசியல் அசாதாரண சூழல் காரணமாக சீனா தனது போர்க் கப்பல்களை அங்கு அனுப்பி வைத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த ஒரு சீனப் போர்க்கப்பல், மாலத்தீவுக்குச் செல்லாமல், தென் சீனக் கடல் பகுதிக்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பரப்புக்குள் சீனப் போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கடற்படை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சீனா நுழைவதற்கான வழித்தடங்களில் 8 போர்க் கப்பல்களை கடற்படை நிறுத்தியுள்ளது.

இந்த 8 போர்க் கப்பல்களும் இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து தகவல்களை வழங்கும். ருக்மினி ரேடார் மூலமும் ((Rukmini radar)) இந்தியப் பெருங்கடல் கண்காணிக்கப்படுகிறது.

Source:polimer


கருத்துகள் இல்லை