பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ஏவுகணை LY-80
#Know_Your_Enemy
HQ-16 அதிகபட்சம் 40கிமீ வரை வரும் வான் இலக்குகளை தாக்க வல்லது.அதே நேரத்தில் 400 முதல் 10,000மீ வரும் இலக்குகளை தாக்க வல்லது.
இந்த HQ-16 வான் பாதுகாப்பு அமைப்பில் ஒரு IBIS-150 3D இலக்கை தேடும் ரேடார் , ஒரு solid-state S-band passive electronically-scanned array (PESA) ரேடார் (150 km) , ஒரு multiple L-band tracking மற்றும் வழிகாட்டும் PESA ரேடார்கள், மற்றும் ஆறு அறைகள் கொண்ட செங்குத்தான ஏவுகணை செலுத்தும் அமைப்பு உள்ளது.
இந்த ஏவுகணை அமைப்பை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி உள்ளது. இந்தியா இவற்றை கடந்து தாக்குதல் நடத்துவது சிரமம்.ஏன்? நமக்கு இந்த அமைப்புகள் எங்கே நிறுத்தப்பட்டுள்ளது என தெரியாமல் உள்ளே சென்று தாக்குவது ஆபத்து.
சில வழிகளை காண்போம்.
1.இந்தியாவிடம் உள்ள உளவு செயற்கைகோள் மூலம் இவற்றின் இருப்பு நிலையை புகைப்படம் வழியாக அறியலாம்.இவை பெரிய விசயமல்ல.அடுத்து இவற்றை அழிக்க வேண்டும்.
2.எப்படி? இந்திய விமானப் படை Kh-31P ,மார்டல், Kh-58U போன்ற ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டுள்ளது.இவற்றை கொண்டு வானத்தில் பாதுகாப்பான தூரத்தில் நின்று ரேடார்களை அழிக்கலாம்.இந்த கேஎச் ஏவுகணைகள் Mach 3 வேகம் செல்லக்கூடியவை.LY-80 ஏவுகணை Semi-Active Radar Homing (SARH) வழிகாட்டும் அமைப்பை பெற்றுள்ளதால் ரேடாரை அழித்தாலே ஏவுகணை இயங்காது.மேலும் ஏவுகணையின் அதிகபட்ட தூரத்திற்கு வெளியே நின்று ஏவுவதால் ஏவுகணையால் நமது விமானத்தை அழிப்பது கடினம்.
4.நமது ஹெரோப் ஆளில்லா தற்கொலை விமானங்களை கொண்டு தாக்கலாம்.ஆனால் இது முழு வெற்றிபெற சாத்தியம் குறைவு.
5.நமது ஜாகுவார் தரை தாக்கும் விமானம் மற்றும் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணைகள் உதவியுடன் தாக்கி அழிக்கலாம்.
கருத்துகள் இல்லை