Breaking News

டோகாலமில் பிடியை இறுக்கும் சீனா


டோகாலமில் பிடியை இறுக்கும் சீனா

சீனா டோக்லாமில் தன் பிடியை இறுக்கி வருகிறது.இதன் காரணமாக இந்திய இராணுவத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு செயலாளர் பூட்டானுக்கு ஒரு இரகசிய பயணம் சென்றுள்ளனர்.

இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத், வெளியுறவு மந்திரி விஜய் கோகலே மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டவால் ஆகியோர் இந்த பிப்ரவரி மாத  தொடக்கத்தில் பூட்டானுக்கு சென்றுள்ளனர்.அங்கு அவர்கள் பல முக்கிய மற்றும் மூலோபாய பிரச்சினைகள் பற்றி பூட்டானின்  தலைமையுடன் விரிவான விரைவான மற்றும் விவேகமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

ராயல் பூட்டான் இராணுவம் ரோந்து  நடத்தும் பகுதிகளில் தற்போது சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ரோந்து செய்வதாக இந்திய உளவுத்துறை அறிக்கை எச்சரித்துள்ளது.

ஊடுருவல் நடவடிக்கைக்கு பிறகும்,சீனப் படைகள் ஆயுதம் தாங்கி ரோந்து நடத்துகின்றன.இந்தப் பகுதியில் முன்பு இராயல் பூடான்  படைகள் ரோந்து செய்து வந்தன.லாரியோங்,சரிதாஙம,சின்சுலும்பா மற்றும் பங்கா லா பகுதியில் சீன இராணுவம் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன.இவைமட்டுமல்ல தாக்கும் விமானங்கள் மற்றும் வானூர்திகள் உதவியுடனும் உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

கிடைத்த தகவல் படி வடக்கு டோகோலாம் சீனாவில் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது.73 நாள் இந்தியா சீனா முரண்பாட்டு நிலைக்கு பிறகு சீனா மீண்டும் அந்த பகுதியில் தன் படை ஒருங்கிணைப்பை நடத்தி வருகிறது.

டோகாலா ஸ்பர் பகுதியில் சுமார் சிறிய முதல் பெரிய டெண்ட்டுகள் தென்படுகின்றன.அந்த பகுதி வான் பாதுகாப்பு முழுவதும் கைப்பற்றப்பட்டு சீனாவிடம் உள்ளது.தொலைத்தொடர்பு ட்ரெஞ்ச் என அனைத்திருக்கும் சீனா தயாராகி வருவகிறது.கண்கானிப்பு நிலையம் அதன் மேல் சீனக் கொடி தென்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்திலையில் இந்திய தலைமைகள் மற்றும் பூடானின் தலைமைகள் இணைந்து இந்த இரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளன.இதில் தற்போது நடந்து வரும் அனைத்து விசயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.மேலும் இருநாடுகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் அனைத்தையும் இந்தியா இரகசியமாக நகர்த்தி வருகிறது.இந்த பிரச்சனை காரணமாக பூடான் சீனா 20சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளன.ஆனால் இன்று வரை எந்த முடிவும் இல்லை.

இந்தியாவும் டோகாலாம் பகுதியில் தனது தசையை இறுக்கி தான் வருகிறது.



கருத்துகள் இல்லை