ஜம்மு ராணுவ முகாம் மீது தாக்குதல்
ஜம்மு ராணுவ முகாம் மீது தாக்குதல்: ராணுவ வீரர்கள் 5 பேர் பலி 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ முகாம் ஒன்றின் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் வந்து நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர். பொது மக்கள் ஒருவர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா? என்பது குறித்து ராணுவ வீரர்கள் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில்,
எங்கள் வீரர்கள் ஆப்பரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பார்கள் என்று உறுதியுடன் கூற முடியும் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை