தீவிரவாதிகளால் சுடப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்கள்!
ஜம்மு காஷ்மீரில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சஞ்சுவானில் உள்ள ராணுவ முகாமில் கடந்த சனிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது சாசதா கான் என்கிற பெண் படுகாயம் அடைந்தார். அவரின் முதுகில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவியான அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ஜம்முவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து துப்பாக்கி குண்டை அகற்றிய மருத்துவர்கள் பிரசவ சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்து முடித்தனர். அழகான பெண் குழந்தை ஒன்றை சாசதா கான் பெற்றெடுத்தார்.
கருத்துகள் இல்லை