Breaking News

2.4பில்லியன் டாலர்களுக்கு புதிய ஆயுதங்கள் வாங்க அனுமதி


2.4பில்லியன் டாலர்களுக்கு புதிய ஆயுதங்கள் வாங்க அனுமதி


இந்திய மதிப்பில் சுமார் 15,935 கோடிகள் செலவில் புதிய ஆயுதங்கள் வாங்க அனுமதி அளித்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.புதிய அஸால்ட் ரைபிள்ஸ்,இலகு ரக இயந்திரத் துப்பாக்கிகள்,நீண்ட தூரம் சுடும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் என புதிய ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன.

பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மிக அவசர கால நடவடிக்கையாக இவையனைத்தும் வாங்கப்பட உள்ளது.

அதே போல் இந்திய போர்க்கப்பல்களின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை திறனை அதிகரிக்க Advanced Torpedo Decoy அமைப்புகளும் வாங்கப்பட உள்ளது.

இதன் படி 7.40 லட்சம் புதிய துப்பாக்கிகள்,5719 புதிய சினைப்பர் துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளது.

சுமார் 12,280கோடி செலவில் இந்த ஏழு லட்சத்து நாற்பதாயிரம் துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன.இந்த துப்பாக்கிகள் முப்படைகளுக்கும் சேர்த்து வாங்கப்பட உள்ளன.

இதோடு சேர்த்து சுமார் 1819கோடி செலவில் இலகுரக இயந்திர துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளது.

அதே போல் 5,719 சினைப்பர் ரைபிள்கள் சுமார் 982 கோடி செலவில் வாங்கப்பட உள்ளது.


கருத்துகள் இல்லை