பாக் பங்கர்களை தாக்க இந்தியா பயன்படுத்தும் ஆயுதங்கள் எவை
பாக் பங்கர்களை தாக்க இந்தியா பயன்படுத்தும் ஆயுதங்கள் எவை..
பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தும் போது இந்தியா பலவித ஆயுதங்களை கொண்டு பதிலடி கொடுக்கிறது.அதில் முக்கியமானவைகள் இவைகள் தான்..
1. டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் (ATGMs):
பாக் நிலைகளை தகர்க்க இந்தியா உபயோகிக்கும் பெரும்பாலான ஆயுதங்களில் இதுவும் ஒன்று.இந்தியாவிடம் இரண்டாம் தலைமுறை மிலன் மற்றும் கொன்குர் ஏவுகணை அமைப்புகள் உள்ளன.இவைகள் பிரான்ஸ் மற்றும் இரஷ்யாவிடம் அனுமதி பெற்று நமது பாரத் டைனமிக் லிமிடெடில் தயாரிக்கப்படுகின்றன.நமது பக்கத்தில் ஏற்கனவே பாக் பங்கர்களை இந்தவகை ஏவுகணைகள் கொண்டு தகர்ப்பதை பார்த்துள்ளோம்.
2. Zu-23-2B :
Zu-23-2B ஒரு விமான எதிர்ப்பு துப்பாக்கி.வானில் வரும் விமானம் மற்றும் தரை இலக்குகளையும் தாக்க வல்லது.1950களில் சோவியத்தால் மேம்படுத்தப்பட்டது.இது 2.5கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்க வல்லது.
3. 105 mm Indian Field Gun :
தனது பலத்தை எப்போதும் எல்லைக் கோட்டில் நிரூபித்த ஒன்று இந்த 105mm இந்தியன் பீல்டு துப்பாக்கி.17 கிமீ தொலைவு உள்ள இலக்குகளை தகர்க்க வல்லது.குறைந்த எடை உடையதால் மலைப்பகுதிகளுக்கான போர்முறைக்கு ஏற்றது.
4. Carl Gustav :
கார்ல் கஸ்தவ் ராக்கெட் லாஞ்சர் எல்லையில் மட்டுமல்ல காஷ்மீர் முழுவதும் உள்ள நமது படைகளால் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.இதில் உள்ள 84 mm ராக்கெட் உதவியுடன் பாக் நிலைகளை அடிக்க முடியும்.இதன் ஏவு தொலைவு 1கிமீ ஆகும்.
5. Automatic Grenade Launchers :
தானியங்கி கிரேனைடு செலுத்தும் அமைப்பு.இராணுவம் இரஷ்யத் தயாரிப்பான AGS-30 மற்றும் AGS-17 அமைப்புகளை பாக் நிலைகளை தாக்க பயன்படுத்துகிறது.2கிமீ தொலைவில் உள்ள நிலைகளை கூட துல்லியமாக தாக்க வல்லது.
கருத்துகள் இல்லை