இந்தியா-பாக், இந்தியா- சீனா உறவு மிக மோசமாக உள்ளது-அமெரிக்க உளவுத் துறை
இந்தியா-பாக், இந்தியா- சீனா உறவு மிக மோசமாக உள்ளது-அமெரிக்க உளவுத் துறை
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக் தாக்குவதால் இந்தியா பாக் உறவு மிக மோசமாக பதட்டமான நிலையில் உள்ளதாக அமெரிக்க கூறியுள்ளது.மேலும் பாக்கிஸ்தான் புதிய வகை அணு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாய ஏவுகணைகளை மேம்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பாக் புதிய வகை ஆயுதங்களை பாக் உருவாக்குவது,தீவிரவாதிகளுடனான உறவு , தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் தொய்வு, சீனாவுடன் நெருக்கம் போன்றவற்றால் அமெரிக்காவிற்கு பாதிப்பு என தகவல் வெளியிட்டுள்ளது.
அதே போல பாக் ஆதரவளிக்கும் தீவிரவாத இயக்கங்கள் தங்களது நிலைகளையும் வலுப்படுத்தி வருகின்றனர்.இந்த இடங்களில் இருந்து தான் தீவிரவாதிகள் இந்தியா மற்றும் ஆப்கனில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை