Breaking News

புதிய டாக்டிகல் ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான்


பாகிஸ்தான் புதியவகை அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

வாஷிங்டனில் நாடாளுமன்றக் குழு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ்,  பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார்.
குறுகிய தூர ஆயுதங்கள், கடல் சார் க்ரூயிஸ் ஏவுகணைகள், வான் சார்ந்த குரூயிஸ் ஏவுகணைகள், நீண்டதூர ஏவுகணைகள் உள்ளிட்டவறை பாகிஸ்தான் தயாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

 இது தெற்காசிய மண்டலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் மாநிலம் சுஞ்சுவான் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குல் பல்வேறு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை