300 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளனர்-இராணுவம்
300 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளனர்-இராணுவம்
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியாக இந்தியாவிற்குள் நுழைய 300 தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.இவர்கள் அனைவரும் ஊடுருவ பாக் உதவுவதாக குற்றம் சாட்டியுள்ளது நமது இராணுவம்.
இராணுவத்தின் வடக்கு பிராந்திய உதம்பூர் தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த லெட்.ஜென் தேவராஜ் அன்பு , கிட்டத்தட்ட 185-220 பயங்கரவாதிகள் தெற்கு பகுதியிலும் 190-225 வடக்கு பகுதியிலும் ஊடுருவ தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அதே போல் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்த தொடர் இராணுவ முகாம் தாக்குதல்களில் பாக் இராணுவ அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
பதிலடி கொடுப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இராணுவம் பதிலடிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும் எனவும், இராணுவத்தின் கணக்குப்படி இந்திய இராணுவத்தின் பதிலடியில் சுமார் 192 பாக் வீரர்கள் கொல்லப்பட்டிப்பதாகவும் கூறினார்.
Post Comment
கருத்துகள் இல்லை