Breaking News

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு 4 மடங்கு உயிர்ச்சேதம் : பிபின் ராவத்


இந்திய ராணுவத்தின் தாக்குதலால், எல்லையருகில் அத்துமீறும் பாகிஸ்தான் படையினருக்கு 4 மடங்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் 280 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறியதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 32 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 30 வீரர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியப் படையினரால் 130க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு ஏற்படுத்திய உயிர்ச்சேதத்தை விட பாகிஸ்தான் மூன்று அல்லது நான்கு மடங்கு சேதத்தை சந்தித்துள்ளது என்று இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் படைகள் நிலைகுலைந்து பின்வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

 இந்திய ராணுவத்தின் அனைத்து உயர் அதிகாரிகளும் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே தமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் பலர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததாக கூறப்படுகிறது. ஏராளமான பாகிஸ்தான் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

Source:polimer


கருத்துகள் இல்லை