ஐந்து இந்திய வீரர்களை கொன்றதாக பாக் செய்தி வெளியீடு
ஐந்து இந்திய வீரர்களை கொன்றதாக பாக் செய்தி வெளியீடு
பாகிஸ்தானின் துருப்புக்கள் தத்த பானி செக்டாரில் உள்ள இந்திய இராணுவப் நிலையை அழித்து, ஐந்து வீரர்களைக் கொன்றதாகக் கூறியுள்ளது.
பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் நேற்று இரவு ஒரு ட்வீட் செய்தார். இந்திய இராணுவ நிலையில் குண்டுவெடிப்பதைக் காட்டும் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளான். தாக்கியபின் அந்த இடத்திலிருந்தும் புகை எழுவது அந்த பதிவில் உள்ளது.
முன்னதாக, ஒரு அறிக்கையில், பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவின் "ஒழுக்கமற்ற மற்றும் தொழில்முறையில்லாத அணுகுமுறை" முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது என கூறியிருந்தார்.
பாக் நேற்று இந்திய தூரதை அழைத்து இந்தியாவின் துப்பாக்கிச்சூடுக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தது.
இந்திய இராணுவச்செய்திகள்
கருத்துகள் இல்லை