Breaking News

உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்

உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்
           
இந்தியா தனது இராணுவத் திறன்களை நவீனமயமாக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில் சீனா 150.5 பில்லியன் டாலர் வரை பாதுகாப்புக்காக செலவு செய்து வருகிறது. 


உலகில் இந்தியா பாதுகாப்புக்காக செலவு  செய்யும் நாடுகளில் 5 வது இடத்தை பிடித்து உள்ளது முதல் முறையாக இங்கிலாந்தை முந்தி உள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனம்  மூலோபய  ஆய்வுகள், ஒன்று  இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ சமநிலையில் ஒரு முக்கிய மாற்றத்தை சுட்டிகாட்டுவதாக குறிப்பிட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டு 52.5  பில்லியன் டாலர்கள் பாதுகாப்புக்கு ஒதுக்கி இந்தியா இங்கிலாந்தை முந்தி உள்ளது. 2016 ஆம் ஆண்டில்  51.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருந்தது.

இந்த தகவல் இராணுவ இருப்பு 2018 மூலோபாய ஆய்வுகள் சர்வதேச நிறுவனம் (IISS) அறிக்கையில் தெரியவந்து உள்ளது.

அதில் ,இங்கிலாந்து 2016 ஆம் ஆண்டு 52.5 பில்லியன் அமெரிக்க டாலர்களும், 2017 ஆம் ஆண்டு 50.7 பில்லியன் டாலர்களும்  ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் உள்ள இராணுவ சமநிலையில் ஒரு முக்கிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது, இது ஒரு உலகளாவிய சூழலில் இங்கிலாந்தை விட பிராந்திய ஆதாரங்களை வளர்ப்பதற்கான இந்தியாவின் அதிக திறன்களை ஒதுக்கீடு செய்துள்ளது என  தெற்கு ஆசியாவிற்கான IISS மூத்த அதிகாரி ராகுல் ராய் சவுதிரி கூறி உள்ளார்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பாதுகாப்பு வரவு செலவுத்திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு இந்தியாவை விட 3 மடங்காக 150. 5 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்து உள்ளது சீனா.

சீனாவின் உண்மையான பாதுகாப்புச் செலவுகள் 2016-17ல் கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் செலவுகள்  2.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல் சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியாவை விடவும் அதிக நீர்மூழ்கிக் கப்பல்கள், வழிமறித்து அழிக்கும் ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்களை கட்டியுள்ளது. சீனா தொடர்ந்து பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதோடு பிராந்தியத்தில் அமெரிக்காவை சவால் விட முனைகிறது.

ஆய்வின் படி, சீன ராணுவம் இந்தியாவை விட 600,000 க்கும் அதிகமான ராணுவ வீரர்களை வைத்து உள்ளது. தாக்குதல் போர் விமானம் இந்தியாவிடம் 785ம் சீனாவிடம் 1200ம் உள்ளது.

ரஷ்யா, உலகின் நான்காவது மிகப்பெரிய பாதுகாப்பு வரவு செலவு  நாடாக உள்ளது. அது 61.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கி உள்ளது.

சவூதி அரேபியா 76.7 பில்லியன் டாலர் செலவில் பாதுகாப்பு செலவினத்திற்காக ஒதுக்கி  உலகில் 3 வது இடத்தை பிடித்து உள்ளது.

Source:Daily thanthi

கருத்துகள் இல்லை