Breaking News

சாக்ரோ சர்ஜிகல் தாக்குதல்- பாக்கிஸ்தானில் இந்தியாவின் திடீர் தாக்குதல்



சாக்ரோ சர்ஜிகல் தாக்குதல்- பாக்கிஸ்தானில் இந்தியாவின் திடீர் தாக்குதல் 


1971 ஆம் ஆண்டின் போரில் சாக்ரோ மற்றும் பல பாக்கிஸ்தானிய இராணுவ நிலைகளில் எதிரி பிரதேசத்தில் 80கிமீ  நுழைந்து நடத்திய தாக்குதல் இன்று வரை மிகவும் தைரியமான மற்றும் மறக்கமுடியாத தாக்குதலாக உள்ளது.


10வது பாராவின் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் எதிரிகளின் நிலைகளைத் தாக்கி, உயிரிழப்புகள் ஏதுமின்றி வெற்றியோடு திரும்பி வந்தனர்.
அந்த காலத்தில் அவர்கள் எதிரி பிரதேசத்தில் ஆழமாக அவர்களுக்கு ஊடுருவுவதற்கு பெரிய தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லை. கமாண்டோக்கள் 500 கிலோ மீட்டர்கள் கடந்து சென்று  பாக்கிஸ்தான் நிலைகளைத் தாக்கினர்.

 0700 மணி, டிசம்பர் 5, 1971 இல், பாலைவன ஸ்கார்பியன்ஸ் வீரர்கள்  (10 பாரா கமாண்டோக்கள்) , 70 கிமீ எதிரியின் பிரதேசத்திற்குள் ஊடுருவினர்.கிடா என்ற இடத்தில் மணல் திட்டுகள் மேல் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி நிலைகளில் இருந்த நடுத்தர இயந்திர துப்பாக்கி (MMG)வீரர்களை நோக்கி சுடத் தொடங்கியது.


ஜீப்பில் வந்த  கமாண்டோக்கள் இரவின் நிழலில் பாதுகாப்பு நிலைகளை எடுத்து பதுங்கிகொள்ள  ஒரு ஜீப் மட்டும் தன் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமர் நேரடியாக மெசின் கன் நிலைகளை நோக்கி தாக்கிகொண்டே சென்றது.

நாய்க் நிஹால் சிங் அவர்கள் அவரது ஜீப் மீது இருந்த  லைட் இயந்திர துப்பாக்கி (LMG) எடுத்து  இருளின் நிரலில் எதிரி மட்டுமே இலக்காக வைத்து தனது இயந்திர துப்பாக்கி இயக்கினார்.

இந்த தைரியமான தாக்குதலை கண்ட  மற்ற அணிகள் தங்களது  துப்பாக்கி எடுத்தனர்.18 LMG கள் தொடர்தாக்குதலாக எதிரியின் நிலைகளை தாக்கினர்.எதிரி வீரர்கள் ஒருஒருவராக செத்து விழ பிழைத்தவர்கள் தங்கள் நிலைகளை விட்டு பின்வாங்கி ஓடினர்.

உலகின் மிகத் தைரியத் தாக்குதலாக கருதப்பட்ட இந்த நிகழ்வு தான் நமது பாரா கமாண்டோ வீரர்களின் தொடக்கம்.

இரண்டாம் உலகப் போரின் போது லிபியா மற்றும்  ஃபூகாவில் உள்ள ஒரு ஜெர்மன் விமானநிலையத்தில் எதிரி எல்லைகளுக்கு பின்னால் பிரிட்டிஷ் சாஸ் சிறப்பு படை தாக்குதல்களால் ஈர்க்கப்பட்ட நமது வீரர்கள்  இந்த வெற்றிகரமான செயல்பாடை  1971 போரின் போது செய்து முடித்து  பாலைவனத்தில் இந்திய இராணுவத்தின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தினர்.

இந்த நடவடிக்கை lt col பவானி சிங் தலைமையிலான பட்டாலியன் நான்கு நாட்களுக்கு, எதிரி பிரதேசத்தில் ஆழமாக ஊடுருவ சச்சிரோ மற்றும் விர்வாவில் எதிரிகளின் மீது தாக்குதல்களை நடத்தியது. Lt col  சிங் தனது தலைமை மற்றும் தைரியத்திற்காக மகாவீர் சக்ரா வழங்கி கௌவிரவிக்கப்பட்டார்.

ஆல்ஃபா மற்றும் சார்லி என்ற இரண்டு அணிகள் ஐந்து மாதங்களுக்கு பாலைவன போர் பயிற்சி மேற்கொண்டது. 1967 ஆம் ஆண்டில் உருவாகி வெறும் ஐந்தே ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு இளம் கமாண்டோ பட்டாலியன் படைக்கு முக்கியமான பணிக்கு ஒப்படைக்கப்பட்டது.

எதிரிகள் எல்லைக்குள் 80 கிமீ ஊடுருவி எதிரி நிலைகளை தாக்கி, எதிரிகளின் சப்ளை லைன்களை தாக்கி  குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் அந்த பணி. தங்கள் பணியை முடிக்க, அணிகள் 500 கிலோமீட்டருக்கு மேல் எதிரி பிரதேசத்திற்குள் பயணம் செய்தன.எதிரியின் நிலப்பரப்பு பற்றிய அறிவு குறைவாக இருந்த போதிலும்  மற்றும பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும்  எதிரி நிலைகளை தாக்கி கொண்டே சென்றது.

இரவு நேரத்தில்தான் பெரும்பாலும் பயணம். தங்களுக்கு பழக்கமில்லாத பகுதியில் வீரர்கள் படை ஊர்ந்து சென்றது. பிரிகடியர் ஆபிரகாம் சாக்கோ தான் இரண்டாம் லெப்டினன்ட்.அவர் ஆல்ஃபா அணியில் நியமிக்கப்பட்டார்.பாக்கின்  சச்சிரோவில் உள்ள பாக்கிஸ்தான் ரேஞ்சர்களின்  தலைமையகத்தை தாக்குவது தான் வேலை.

Their mission — to create chaos and take vital assets 80 km into enemy territory.


"வழி மிகவும் மோசமாக இருந்தது.சத்தம் வரக்கூடாது என பலகட்ட ஏற்பாடுகள் செய்திருந்தோம்.இருந்தும் ஒரு முழு டாங்க் பட்டாலியன் உள்ளே நுழைவது போல ஒல ஏற்பட்டது "என்று பிரிகேடியர் சாக்கோவை நினைவு கூர்கிறார்.

பெரும் சத்தத்துடன்  கமாண்டாே  ரெய்டுக்கு செல்வது சரியாகாது, அமைதியாக மறைந்து செல்வதில் தான் வெற்றி இருக்கிறது.நம் படைகளுக்கு சில நன்மைகளும் இருந்தது.எதிரிகள் பல நிலைகளை கைவிட்டு ஓடியிருந்தனர்.

கிட்டா என்ற இடத்தில் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, சாக்ரோவில் உள்ள பாக் ரேஞ்சர் விங் தலைமையகம் வரை ஒரு சிறிய ரோந்துப் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அணி இரவில் நகர்ந்து டிசம்பர் 7 ம் தேதி 0400 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த அனுமதி பெற்றது.


ஆல்பா குழு நகரத்தை சுற்றி ஒவ்வொரு வெளியேறும் வழியையும்  தடுப்பது , சார்லி குழுவிற்கு பாதுகாப்பு வழங்கியது.சார்லி அணி முன்னேறி தாக்குதலை நடத்த தயாரானது. நகரத்தில் பொதுமக்கள் இருந்ததால் ஆபரேஷன் மிக ஆபத்தான ஒன்றாக தான் இருந்தது.
அவர்கள் எதிரி பிரதேசத்தில் ஆழமான விரோத குடிமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது சிக்கலில்  முடியும்.அணிகள் உடனடியாக நகர்த்தப்பட்டன.
கமாண்டோக்கள் நகர்ந்தனர்.நகரம் கைக்குள் விழ ஆரம்பித்தது.ஆனால் பாதி தான் வந்துள்ளது.அந்த நகரத்தை 20வது இராஜ்புத் படையிடம் ஒப்படைத்துவிட்டு மேலும் நகர்ந்தனர் வீரர்கள்.இதில் நமக்கு உயிர்ச்சேதம் இல்லை.எதிரிகள் 17 பேர் கொல்லப்பட,12 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டன.

சாக்ரோ  நடவடிக்கைக்கு பின்னர், சார்லி அணி exfiltratedஆகியது. ஆல்பா அணி அதன் இரண்டாவது இலக்கு நோக்கி நகர்ந்து சென்றது.சக்ரோ நடவடிக்கையின் போது படைகள் மெதுவாக இரவில் மட்டுமே சென்றது.ஆனார் விரவா நடவடிக்கையின் போது நேரம் காரணமாக படைகள் பகலிலும் விரைந்து சென்றன.இந்த நடவடிக்கை பெரும் ரிஸ்கில் தான் செய்யப்பட்டது.டிசம்பர் 8 ல்  விரவாவில் 0200 மணிநேரங்களில் தாக்குதல் தொடங்கியது.எதிரியுடனான முதல் தொடர்பு 0130 மணி நேரத்தில் கண்காணிப்பு நிலையில் தென்பட்டது.


"25 யார்டு  தொலைவிலுள்ள புதர்களில் ஏதோ இயக்கம் தென்படுதை  நாங்கள் கண்டபோது,​அனைத்தையும் நிறுத்தும்படி நான் சைகை செய்தேன்.நான்  நடத்த ஒரு சிறிய ரோந்து படை உருவாக்கப்பட்டது. கண்காணிப்பு நிலையை அடைந்த போது நெருக்கமாக சென்று ஒரு குண்டு எடுத்து வீசி எதிரியுன் கை-கை சண்டையில் ஈடுபட்டேன்" என கலோ சௌதாரி நினைவு கூர்கிறார்.எதிரியிரின் நிலையை அடைந்த போது அனைவரும் தாக்கினோம்.இலகு ரக துப்பாக்கி கொண்டு தாக்கினோம்.சண்டை நெடுநேரம் நடக்கவில்லை.பாகிஸ்தானியர்கள் தங்கள் நிலைகளை விட்டு ஓடிவிட்டனர் என தொடர்கிறார்.விராவா கைப்பற்றப்பட்டது.

கமாண்டோக்கள் பின்னர் நகர்ர்பர்கர் மற்றும் தெசில் த தலைமையங்களை சிரமம் இல்லாமல் டிசம்பர் 8 காலையில் கைப்பற்றினர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு அணிகள் தங்கள் தளங்களுக்கு திரும்பி வந்தன.

ஆல்பா குழு நீண்ட நேரம் ஓய்வு எடுக்கவில்லை.அவரகள் மற்றொரு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டனர்.இஸ்லாம்கோட்டில் இருந்த அம்யூனிசன் கிடங்களை தாக்குவது தான் அந்த வேலை.இந்த குழு மீண்டும் பாகிஸ்தானுக்கு இந்த வேலைக்காக 16 டிசம்பர் அன்று நுழைந்தது.சுந்தேகான் என்ற கிராமத்தை அடைந்த போது அந்த கிராமம் வெறிச்சோடி கிடந்தது.

இரவின் நிழலில், அவர்கள் இஸ்லாம்கோட்டை நோக்கி நகர்ந்தனர் மற்றும் எதிரி ஆம்யூனிசன் கிடங்கிற்கு 2 கி.மீ கிழக்கு பகுதியில் காத்திருந்தனர். 0530 மணி நேரத்தில், அவர்கள் தாக்குதல் தொடுத்தனர் ஆனால் அந்த கிடங்கு காலியாக இருந்தது.எனவே மீண்டும் அவர்கள் இந்தியா திரும்பினர்.வரும் வழியில் மீண்டும் எதிரிகளை சந்தித்தனர்.உடனடியாக தாக்கினர்.மற்ற படைகள் இணைய மொத்தம் 20 பாக் வீரர்கள் கொல்லப்பட மற்ற வீரர்களை போர்கைதியாக பிடித்துச் சென்றோம் என கலோ சௌதாரி  கூறினார்.

கட்டுரை காப்புரிமைக்கு உரியது.
இந்திய இராணுவச்செய்திகள்

கருத்துகள் இல்லை