Breaking News

இந்தியா தொடர் அணுஏவுகணைச் சோதனை


இந்தியா இன்று உள்நாட்டு தயாரிப்பான  இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-2ஐ  சோதனை செய்துள்ளது.

தரை-தரை தாக்கும் அணுஆயுத ஏவுகணையான அக்னி-2  ஒடிசாவின் பாலசோரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில் லாஞ்ச் 4வது வளாகத்தில் காலை 8.38 மணிக்கு சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை  Strategic Forces Command ஆல் யூசர் சோதனையாக ஏவி சோதனை செய்யப்பட்டது.அக்னி-2 ஏற்கனவே படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரு நிலை ஏவுகணையான அக்னி-2 அதிநவீன அதிதுல்லியத்தன்மை கொண்ட வழிகாட்டும் அமைப்பான  state-of-the-art command and control systemஐ கொண்டுள்ளது.இது  solid rocket propellant systemஐ கொண்டுள்ளது.

சுமார் 2000கிமீ வரை செல்லும் இந்த ஏவுகணை 20மீ நீளம் மற்றும் 17 டன்கள் எடை கொண்டது.மற்றும் 1000கிகி அணுவை சுமந்து செல்ல வல்லது.


கருத்துகள் இல்லை