அதிகாரபூர்வ மொழியாக சீனாவின் மாண்டரின் மொழியை பாகிஸ்தான் அங்கீகரித்தது
பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக மாண்டரினை அறிவிப்பதற்கு பாகிஸ்தானிய செனட் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து நேற்று அனுமதி வழங்கி உள்ளது. #MandarinChinese
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்த வரையில் இந்த நடவடிக்கை தேவை என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இடையில் உள்ள உறவு மேலும் ஆழப்படுத்த மாண்டரின் தெற்காசிய நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தால் சீனா பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இணைய, எளிதாக தொடர்பு உதவி புரியும் என கூறப்பட்டு உள்ளது.
"70 ஆண்டுகள் இந்த ஒரு குறுகிய காலத்தில், சொந்த மொழிகளை புறக்கணித்து நாட்டில் அதிக மக்களின் தாய் மொழியாக இல்லாத ஆங்கில மொழி, உருது, அரபிக் மற்றும் இப்போது சீன மொழி - ஆகிய நான்கு மொழிகளுக்கு ஊக்கமளிப்பதில் பாகிஸ்தான் மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பரவலாக அதிகம் பேசப்படும் பஞ்சாபி மொழி பாஷ்டோ மற்றும் பல பிற மொழிகளும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக அறிவிக்கப்படவில்லை என கூறி உள்ளார்.
Source:Daily thanthi
கருத்துகள் இல்லை