Breaking News

இந்தியா எல்லையில் கோபத்தை வெளிப்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் -பாக்


இந்தியா எல்லையில் கோபத்தை வெளிப்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் -பாக்

தற்போது நடைபெறும் தொடர் தாக்குதல்களுக்காக இந்தியா பாகிஸ்தான் மீது கோபத்தை வெளிப்படுத்தினால் அதே அளவு எதிர்ப்பை நாங்களும் காட்டவேண்டி வரும் என இஸ்லமாபாத் அமைச்சர்  நிர்மாலா அவர்களுக்கு பதிலளித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சருக்கு பாக் பாதுகாப்பு துறை அமைச்சர் பதிலில் விசாரணைக்கு முன்பே பாக்கை குறை கூறுவது இந்தியாவின் வேலை என கூறியுள்ளார்.

இந்தியா எல்லையில் ஏதேனும் சாகத்தில் ஈடுபட முயன்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மிரட்டியுள்ளது பாக்.

தொடர் தாக்குதல்களால் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் " பாக்கிஸ்தான் இதற்கான விலையை கொடுக்க வேண்டும்.நான் திரும்பவும் சொல்கிறேன் பாக் இதற்கான விலையை தர வேண்டும் " என செய்தியில் கூறியிருந்தார்.இதற்கு தான் பாக் தற்போது பதில் கூறியுள்ளது.

எங்கள் எல்லையின் ஒவ்வொரு அடி நிலத்தையும் பாதுகாப்போம் எனவும் கூறியுள்ளார்.

இரண்டு இராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்கியதில்  ஏழு வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை