வீரரின் உடல் ஊரை சென்றடையும் வரை மகன் இறப்பை அறியாத அம்மா
வீரரின் உடல் ஊரை சென்றடையும் வரை மகன் இறப்பை அறியாத அம்மா
சன்சவான் கேம்ப் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுள் ஒருவர் 35 வயதான லான்ஸ் நாய்க் முகமது இக்பால்.
12 வருடத்திற்கு முன் இராணுவத்தில் இணைந்த லா/நா இக்பால் காஷ்மீரின் ட்ரால் பகுதியை சேர்ந்தவர்.தனது கனவு லட்சியமாக ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரியில் இணைந்தார்.சன்சவான் முகாமில் இருந்த லா/நா இக்பால் அவர்களை காண அவரது தந்தை குலாம் முகமது சேக் அவர்கள் சன்சவான் சென்றிருந்த வேளையில் தான் தீவிரவாதிகள் முகாமை தாக்கியுள்ளனர்.
வீரரின் அப்பா குலாம்
இந்த தாக்குதலில் வீரர் மற்றும் அவரது அப்பா இருவரும் வீரமரணம் அடைந்துவிட்டனர்.வீட்டிற்கு வருமானம் தேடி தந்த இருவரும் ஒரே நேரந்தில் வீரமரணம் அடைந்த விசயம் வீரரின் அம்மாவிற்கு தெரியாமல் இருந்துள்ளது.
அவரது அம்மா இருதய நோயாளியாக இருந்ததால் அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை படி தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்துள்ளது.மேலும் அவரது உறவினர்களும் இந்த விசயத்தை கூற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
வீரரின் உறவினர்கள்
கடைசியாக இருவரும் உடலும் கிராமத்தை அடைந்த போது அவரது அம்மா வெடித்து அழுதுள்ளார்.தன் கணவரையும் பெற்ற மகனையும் ஒரே இரவில் இழந்துள்ளார்.
பாக்கிஸ்தானுக்கு பதிலடி தரப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை