கேப்டன் விஜயந்த் தபார் வீர் சக்ரா அவர்களின் வீரவரலாறு
கேப்டன் விஜயந்த் தபார் வீர் சக்ரா
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர் கேப்டன் விஜயந்த். இராணுவ வழி வந்த குடும்பம் என்ற போதிலும் இராணுவத்தில் இணைவதை தன் இலட்சியமாக கொண்டு 2வது இராஜபுதன படைப்பிரிவில் இணைந்தார்.
கார்கில் போருக்கு முன் குப்வாரா பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இவரது படைப்பிரிவு ஈடுபட்டது.அங்கு ருக்சனா என்ற சிறுமியை சந்தித்தார்.அவளுடைய அப்பா அவள் கண்முன்னேுய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பேச்சை இழந்துவிட்டாள்.அவள் மீது அன்பு கொண்ட கேப்டன் தினமும் இனிப்புகள் வாங்கி அவளை சந்திப்பது வழக்கம்.அதிதீவிர முயற்சியின் மூலம் அவளுக்கு பேச்சுவரவழைத்தார்.அவளது ஏழ்மையான குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்துள்ளார்.
இன்னிலையில் கார்கில் போர் தொடங்கியது.தனது கடைசி கடிதத்தில் தனது குடும்பத்தினரை ருக்சனாவை பார்த்துக் கொள்ளும்படி கூறி களம் சென்றார்.இன்று வரை அவரது குடும்பம் அவர்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.
2 இராஜபுதன ரைபில்ஸ்
டோலோலங்க் பகுதியை கைப்பற்ற அனுப்பப்பட்டது.கேப்டனும் அவர்களது வீரர்களோடு சென்று வெற்றிகரமாக கைப்பற்றி மேலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியையும் கைப்பற்றினார்.
மூன்றாவதாக ஒரு பாய்ன்ட்டை கைப்பற்ற செல்லும் போது இவரது படைகடுமையான தாக்குதலுக்கு உள்ளானது.கண் முன்னே உயிர் நண்பர் உயிரற்று விழுகிறார்.கம்பெனி மேஜர் மறுபக்கம் உயிரற்று விழுகிறார்.வீருகொண்டு எதிரியின் பங்கரை நோக்கி சுட்டுக் கொண்டே ஓடுகிறார் தனது மற்றுமொரு நண்பருடன். தலையில் குண்டு பாய்கிறது.சரிந்து தனது நண்பரின் மடியில் வீழ்கினார்.
நாட்டுக்காக தனது உயிர்நீத்த கேப்டனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது.
வீரவணக்கம்.
கருத்துகள் இல்லை