Breaking News

மாலத்தீவிற்கு படைகளை அனுப்ப இந்தியாதயக்கம் ஏன் ??


இந்தியக் கடலோர காவல் படையின் டோர்னியர் விமானம் எப்போதும் மாலத்தீவில் ரோந்து செல்வது வழக்கம்.அதே போல் கண்காணிப்பிற்காக இரு வானூர்திகள் நிரந்தரமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

அதே போல் மாலத்தீவில்  இந்தியா ரேடார் அமைத்துள்ளது.அவை இந்தியாவில் உள்ள கடலோர காவல்படை தலையைகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவும் மாலத்தீவும் இதற்கு முன் மிக நெருக்கமான ஒத்துழைப்புகளில் பிணைந்திருந்துள்ளன.இது தான் சீனாவிற்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.தற்போது சீனா அதை அபகரிக்க முயற்சித்து பல வேலைப்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது.

இந்தியா படைகளை அனுப்ப வேண்டும் என முன்னாள் மாலத்தீவின் தலைவர் முகமது நசீத் கோரிக்கை விடுத்திருந்தார்.ஆனால் இந்தியா இதுவரை இந்த விசயத்தில் வாய் திறக்கவே இல்லை.மேலும் இந்தியா படைகளை அனுப்ப வேண்டும் என்பதள இந்தியர்களின் கோரிக்கை.இந்தியாவின் அருகே சீன ஆதரவு நாடு இருப்பது நமது மொத்த பாதுகாப்புக்குமே ஆபத்து.ஆனால் இந்தியா நேரடியாக படைகளை அனுப்பவது சிரமம் ஏன்? இந்தியா படைகளை அனுப்பினால் இந்தியா ஐநாவிற்கு பதில் சொல்ல வேண்டும்.ஏனெனில் மாலத்தீவு ஒரு இறையாண்மை நாடு.மேலும் சீனா ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்திர உறுப்பினர் நாடு.மேலும் அதற்கு வீட்டாே சக்தி இருக்கிறது.

இந்தியா மாலத்தீவை கைப்பற்றிய பிறகு ஐநாவில் எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை சீனாவால் தடுக்க முடியும்.மேலும் சீனா மாலத்தீவு விசயத்தை பெரிதாக கையில் எடுத்துள்ளது.ஐநா தலையீைடை தவிர வேறு எதையும் அது ஏற்காது.

வேறு என்ன செய்வது ? தற்போது மாலத்தீவில் சர்வாதிகரத்திற்கான முதல் படி தான் நடக்கிறது.பிப்ரவரி 20 எமர்ஜென்சி தொடர்பான பில் அவையில் வர உள்ளது.அவசர நிலையில் தான் ஒரு நாட்டின் தலைவர் அதிகபட்ச அதிகாரத்தை பெறுகிறார் அல்லது வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்கிறார்.

அவர் சர்வாதிகாரியாக மாறினால் ஐநா தலையிட வாய்ப்பு உள்ளது.இந்தியா நேரடியாக தலையிடுவதில் சில பிரச்சனைகள் உள்ளன.மாலத்தீவு இஸ்லாமிய நாடு மற்றும் இந்தியா போன்ற நாடுகள் நேரடியாக படைகள் அனுப்பும் போது அது ஆக்கிரமிப்பாக தான் பார்க்கப்படும்.பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிற்கு சென்று முறையிடலாம்.இது நமக்கு தலைவலி தான்.

நேரடியாக படைகள் அனுப்பினால் இந்த பிரச்சனைகள் வரலாம்.


1. இந்தியாவிற்கு வெளிப்படையான பின்னடைவு ஏற்படலாம்.

2. சீனா இதை வலுக்கட்டயமான ஆக்கிரமிப்பாக ஐநாவில் எடுத்துக் கூறலாம்.இது நமக்கு பிரச்சனை.

3.பாகிஸ்தான் சவுதியிடம் ஓடி இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் இஸ்லாமியர் பிரச்சனையாக காட்டலாம்.

4 India has to prove to the world that it has risen to a position of Global Power and capable of providing security beyond its borders. India would lose that chance.

எமர்ஜென்சிக்கு பிறகு தேர்தல் வந்தால் மாலத்தீவு மக்கள் யாமீனுக்கு பதிலடி கொடுப்பார்கள்.


கருத்துகள் இல்லை