அட்லாண்டிக் சம்பவம்
அட்லாண்டிக் சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக பாக்கிஸ்தானில் இருந்த வெளிநாட்டு தூதர்களை பாக்கிஸ்தானிய இராணுவம் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்தது.இதில் அவர்கள் விமானம் எல்லை கடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இந்தியாவின் இந்த எதிர்வினை நியாயமற்றது என்று பாகிஸ்தான் வல்லுநர்கள் கூறினர்.
முரண்பாடு
காலை 9:15க்கு பாகிஸ்தானின் மெஹ்ரான் (சிந்து மாகாணத்தில்) பாக்கிஸ்தானில் கடற்படைத் தளத்தில் இருந்து உளவு மற்றும் ரோந்துக்காக கிளம்பியது அட்லான்டிக் விமானம். இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நெருங்கியபோது இந்திய விமானப்படை தரை ரேடார் கண்ணில் விமானம் அகப்பட்டது.அப்போது கட்ச் பகுதியில் இருந்த நலியா இந்திய விமானப் படை தளத்தில் இருந்து இரு மிக் -21 வானூர்தியை இடைமறிக்க அனுப்பியது இந்தியா.
வானிலேயே இரு நாட்டு விமானங்களும் சண்டையிடுவது போல பறக்க நமது இரு மிக் விமானங்களுக்கும் அதை சுட்டுவீழ்த்த அனுமதி கிடைத்தது.சரியாக காலை 11:17 மணிக்கு மிக் விமானி ஸ்குவாட்ரான் லீடரம பன்டேலா ஒரு infrared homing R-60 வானிலிருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவகணையை பாக் விமானத்தை நோக்கி ஏவ அது விமானத்தின் என்ஜின் பகுதியைத் தாக்கியது.இயக்கத்தை இழந்து கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த 5 பாக் அதிகாரிகள் உட்பட 16பேரும் இறந்தனர்.
விமானம் ஆயுதங்கள் ஏதும் இன்றி இருந்ததாகவும் அது இந்திய எல்லைக்குள் செல்லவில்லை எனவும் பாக் கதறியது.விமானம் எப்போதும் போல பாக் வான் வெளியில் பறந்ததாக கூறியது.
இந்தியா 1991 ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி எல்லைக்கு பத்துகிமீ பகுதியில் எந்த விமானமும் பறக்க கூடாது எனவும் இது விதிமீறல் எனவும் பதிலடி கொடுத்தது.கடற்படை விமானத்திற்கு எல்லைப்பகுதியில் என்ன வேலை எனவும் கூறியது.
பாக் ஐநாவிற்கு செல்வதாக அறிவித்தது.இதற்கு முன் பாக்கிஸ்தான் இந்திய எல்லையில் ஊடுவிய வீடியோ பதிவுகள் ,இந்திய போர்க்கப்பல்களுக்கு அருகே போன்ற கானொளிகளை ஆதாரமாக வைத்திருந்தது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட சர்வதேச அதிகாரிகள் விமானம் இந்திய எல்லைக்கு அருகே பறந்திருக்கலாம் என முடிவு செய்து பாக்கிடம் ஏன் இவ்வளவு அருகே விமானம் பறந்தது என கேள்விகள் கேட்க பதில் இல்லாமல் திணறியது பாக்.
இதையெடுத்து பாக் ரான் ஆப் கடச் பகுதியில் மரைன் வீரர்களை குவிக்க மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது.
சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்திற்கான பணம் மற்றும் உயரிழந்த வீரர்களுக்கு பணம் வழங்க கூடி சர்வதேச நீதிமன்றம் சென்றது பாக்.பாக் இதை வாதட 25மில்லியன் செலவு செய்ததோடு வழக்கு இந்தியாவுக்கு சாதகமாக மாற பாக் மேல்முறையீடு செய்யவில்லை.
கருத்துகள் இல்லை