Breaking News

மும்பை காவல்துறை Quick Response Team


மும்பை காவல்துறை Quick Response Team

இந்தியாவின் முக்கிய நகரமான மும்பை அடிக்கடி பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாவதுண்டு.மும்பை தாக்குதல் அதிபயங்கரமான ஒன்றாக கருதப்பட்டது.

இதனை எதிர்காலத்தில் தடுக்க தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள் பாணியில் ஒரு சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு படையை மகாராஸ்டிரா அரசு உருவாக்கியது.அவர்கள் தான் போர்ஸ் ஒன் கமாண்டாே படை.

தற்போது நன்கு பயிற்சி பெற்ற 300 இளம் வீரர்கள் இந்த படையில் உள்ளனர்.தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள் போலவே பலவிதமான ஆயுதங்களை பெற்றுள்ளனர்.

புனேவில் உள்ள இராணுவக் கல்லூரியில் முதல் பயிற்சியும்,தேசியப்பாதுகாப்பு படை வீரர்களிடம் சுடுதல் பயிற்சியையும் பெறுகின்றனர்.

மும்பை தாக்குதலுக்கு பிறகு மகாராஸ்டிரா அரசு மாநிலத்தில் ஒரு பாதுகாப்பு படை தேவை என உணர்ந்து இந்த படையை 2009ல் குரேகானில்  உருவாக்கியது. உருவாக்கிய போது முதல் இரண்டு மாத பயிற்சியை இஸ்ரேல் சிறப்பு படையிடம் பெற்றனர்.அதன் பின்னர் தான் போர்ஸ் ஒன் உருவாக்கப்பட்டது.

Glock,MP5,MP9, AKM,M4a1, Ak 103, berret M107 என பலவித நவீன ஆயுதங்களைை இவர்கள் பெற்றுள்ளனர்.

நகரத்தில் தீவிரவாத சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களுக்குள்ளாகவே இவர்களால் அந்த இடத்திற்கு சென்றுவிட முடியும்.



கருத்துகள் இல்லை