Breaking News

இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்க ஈரான் அதிபர் கோரிக்கை


இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா. அவையை ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இந்தியாவில் 3நாள் சுற்றுப் பயணம் செய்தார். டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 5நாடுகளுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது ஏன் என்றும், நூறுகோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவுக்கு அந்த அதிகாரம் வழங்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள நாடுகளிடம் அணு ஆயுத வல்லமையும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து நாடுகளுக்கும் அனைத்து மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் வரை போர்களும், ஆக்கிரமிப்பும், தீவிரவாதமும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் வீட்டோ அதிகாரம் கொண்ட ஒரு நாடு நினைத்தாலும் முறியடிக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5நாடுகளுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம் உள்ளது.




கருத்துகள் இல்லை