சீனாவின் கனவு திட்டம் இந்தியாவின் பார்வையில்
இந்தியா - ஈரான் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
அரசுமுறைப்பயணமாக டெல்லி வந்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரௌகனி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்பேசினார். வர்த்தகம், முதலீடு, எரிவாயு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் மேம்பாடு குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர் மோடியும், ரௌகனியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்தியா அமைதியை விரும்பும் நாடு என புகழராம் சூட்டிய ரௌகனி, 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு, ஐ.நா.சபையில், ஏன் வீட்டோ அதிகாரம் வழங்கக்ககூடாது என்றும் வினவினார்.
சாபகர் துறைமுகம்:
சாபகர் துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு குத்தகைக்கு விடும் ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது.
சாபகர் துறைமுகமானது மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் முக்கிய துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் ஈரான் அதிபர் ஒருவர் இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறை என்பதும் முக்கியமானதாகும்.
Via:News7Tamilnadu
கருத்துகள் இல்லை