Breaking News

150 காம்பாட் வாகனங்களை வாங்குகிறது இந்திய இராணுவம்


150 காம்பாட் வாகனங்களை வாங்குகிறது இந்திய இராணுவம்

போர்களின்போது இராணுவத்தின் கவசபோர் திறன்களை உயர்த்துவதற்கு இந்திய ராணுவம் 150 காலாட்படை போர் வாகனங்கள் வாங்க உள்ளது.சுமார்  2,200 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது.

"சுமார் 2,200 கோடி ரூபாய் மதிப்புள்ள 150 காலாட்படை கவச போர் வாகனங்கள் வாங்கும் திட்டம் அடுத்த நடைபெற உள்ள நிர்மல் சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட கூட்டத்திற்கு முன் அனுப்பி அனுமதி வழங்கப்படும்" என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கவச வாகனங்கள் இன்பான்ட்ரி பிரிவுக்கு மட்டுமல்லாமல் கார்ப்ஸ் ஆப் சிக்னல்,ஆர்டில்லரி பிரிவு,கார்ப்ஸ் ஆப் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை