அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர் உயிரிழந்தான்
அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர் உயிரிழந்தான்
தேரா இஸ்மாயில் கான்,
பாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியின பகுதியில் அமெரிக்கா சமீபத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் தெரிக்-இ-தலிபான்-பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவன் காலித் மெஹ்சுத் உயிரிழந்தான்.
பயங்கரவாத இயக்கத்தின் செய்தித்தொடர்பாளர் அசாம் தாகீர் மெஹ்சுத் பேசுகையில், வடக்கு வசிரிஸ்தானில் வியாழன் அன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலில் காலித் மெஹ்சுத் உயிரிழந்தார் என தெரிவித்து உள்ளார். வடக்கு வசிரிஸ்தான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக பார்க்கப்படுகிறது.
இப்போது காலித் மெஹ்சுத் பதவிக்கு கமாண்டர் முப்தி நூர் வாலி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக போரிட அமெரிக்கா நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வந்தது. பாகிஸ்தான் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஏமாற்றுவதாக நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா நிறுத்துவிட்டது. மாறாக அமெரிக்கா இப்போது பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதலை முன்னெடுக்க தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் எதிர்ப்பை பதிவு செய்தாலும் அமெரிக்கா கண்டுக்கொள்வது கிடையாது. பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் வான்வழி தாக்குதலை தொடரத் தொடங்கிவிட்டது.
கருத்துகள் இல்லை