Breaking News

காஷ்மீர் இராணுவ முகாம் தொடர் தாக்குதல்கள்: லஷ்கர் இயக்கம் பொறுப்பேற்பு


காஷ்மீர் இராணுவ முகாம் தொடர் தாக்குதல்கள்: லஷ்கர் இயக்கம் பொறுப்பேற்பு

காஷ்மீரில் நடைபெற்றுவரும் சன்ஜவான் மற்றும் சிஆர்பிஎப் முகாம் தாக்குதலுக்கு லஷ்கர் இயக்கம் பொறுப்பேற்றது.முன்னதாக ஜெய்ஸ் இ முகமது இயக்கம் காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டது.இன்று காஷ்மீர் செய்தி நிலையத்திற்கு லஷ்கர் தலைவர் முகமது ஷா தெரிவித்த செய்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நன்கு ஆயுதம் தரித்த ஐந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்முவில் உள்ள சன்ஜவான் இராணுவ முகாமில் நுழைந்து தாக்கினர்.

கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்பாகவே அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இராணுவ தளத்தை உளவு பார்த்து அதன் பின் தான் அவர்களுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டுள்ளன.பயங்கரவாதிகள் நடமாட்டத்தை உணர்ந்த தளத்தின் காவல் சென்ட்ரி வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.அதன் பின் இராணுவ குடியிருப்பில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்கியதில் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரியை சேர்ந்த ஐந்து வீரர்கள் மற்றும் வீரரின் அப்பா ஒருவர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகரில் கரீம் நகர் பகுதியில் உள்ள 23பட்டாலியன் சிஆர்பிஎப் தலைமையகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.காலையில் தொடங்கிய தாக்குதலானது இப்போது வரை நடைபெற்று வருகிறது.

இதில் சிஆர்பிஎப் பின்  49பட்டாலியனைச் சேர்ந்த முஜாகித் கான் என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.அவர் பீகாரை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆபரேசன் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை