தொடரும் தாக்குதல்களும்! வீரமரணமும்
தொடரும் தாக்குதல்களும்! வீரமரணமும்
நன்கு ஆயுதம் தரித்த ஐந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்முவில் உள்ள சன்ஜவான் இராணுவ முகாமில் நுழைந்து தாக்கியது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட பத்து மாதங்களுக்கு முன்பாகவே அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இராணுவ தளத்தை உளவு பார்த்து அதன் பின் தான் அவர்களுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டுள்ளன.பயங்கரவாதிகள் நடமாட்டத்தை உணர்ந்த தளத்தின் காவல் சென்ட்ரி வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.அதன் பின் இராணுவ குடியிருப்பில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்கியதில் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரியை சேர்ந்த ஐந்து வீரர்கள் மற்றும் வீரரின் அப்பா ஒருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஆபரேசன் முடிந்ததாக கருதப்பட்ட நிலையில் மேலும் ஒரு பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பயங்கரவாதியை வீழ்த்த கடைசி தாக்குதல் முயற்சியில் வீரர்கள் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் கரீம் நகர் பகுதியில் உள்ள 23பட்டாலியன் சிஆர்பிஎப் தலைமையகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.காலையில் தொடங்கிய தாக்குதலானது இப்போது வரை நடைபெற்று வருகிறது.
இதில் சிஆர்பிஎப் பின் 49பட்டாலியனைச் சேர்ந்த முஜாகித் கான் என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.அவர் பீகாரை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த இரு தாக்குதல்களுக்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அடுத்தடுத்து இராணுவ முகாம்கள் தாக்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியா மீண்டும் சர்ஜிகல் தாக்குதல் நடத்தினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாக்கிஸ்தான் மிரட்டியுள்ளது.
இந்திய இராணுவச்செய்திகள்
கருத்துகள் இல்லை