பாகிஸ்தானுக்கு பதிலடி எவ்வாறு கொடுக்கலாம்
பாகிஸ்தானுக்கு பதிலடி எவ்வாறு கொடுக்கலாம் ?
உரி முகாம் தாக்குதலை இங்கு யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.மணிப்பூரில் இராணுவ வீரர்கள் 20 தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த பிறகு நடந்த மிகப் பெரிய இழப்பு தான் இந்த உரி முகாம் தாக்குதல்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இராணுவத்தின் சிறப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதிலிருந்து பாக் பாடம் கற்கவில்லை.மீண்டும் எல்லைக் கோடு பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ உதவ செய்கிறது.
இவ்வாறு ஊடுருவிய தீவிரவாதிகள் காஷ்மீரில் அடுத்தடுத்து இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.சன்சவான் முகாம் தாக்குதலில் ஆறு வீரர்களும் , சிஆர்பிஎப் முகாம் தாக்குதலில் இரு வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர்.
இதற்கு இந்தியாவின் பதிலடி எவ்வாறு இருக்க வேண்டும்?
மீண்டும் சர்ஜிகல் தாக்குதல் நடத்த வேண்டுமா? இல்லை.இந்த முறை பாக் எல்லைப் பகுதிகளில் அதிதீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும்.இந்நேரத்தில் வீரர்களை எல்லை தாண்டி அனுப்புவது சரியாகாது.நமது வீரர்களால் முடியாது என்று இல்லை.அவர்கள் நினைத்தால் பாகிஸ்தானுக்கு அவர்கள் உயிரோடு இருக்கும் போதே நரகத்தை காட்ட முடியும்.
மேலும் இதற்காக பாகிஸ்தான் சில பாக் வீரர்களை இந்தியாவிற்கு பலிகொடுக்க கூட தயங்காது.இந்த முறை பாக்கிற்கு இரத்தக் களறி ஆக்க கூடாது.மனதளவில் தாக்க வேண்டும்.
பலுசிஸ்தான் போராளிகளுக்கு உதவுவது, CPEC வழித்தடத்தை தாக்குதவது போன்ற விசயங்கள்.உலக அளவில் இந்தியாவிற்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.சோவியத் வீழ்ச்சி முதல் இரஷ்ய நட்பு இருந்த வரை இந்தியாவும் கம்யூனிச ஆதரவு நாடாக தான் பார்க்கப்பட்டது.அதன் விளைவுகள் தான் மேற்கு உலக நாடுகள் நமக்கு ஆயுதங்கள் அவ்வளவு அளித்ததில்லை.ஆனால் தற்போது நிலை வேறு.அமெரிக்காவையும் பாகிஸ்தானையும் பிரித்தது மட்டுமல்ல உலக அளவில் அதை தனிமைப்படுத்த பெருமளவு முயற்சி செய்துள்ளோம்.அதன் ஒரே ஆதரவு சீனா தான்.பாக்கிற்கு தனது பொருளாதாரத்திற்காக சீனா தேவை.சீனாவிற்கு தனது CPEC வழித்தடம் தேவை.
பாக்கிற்கு இந்திய ஆறுகளில் இருந்து தான் மிகத் தேவையான நீர் பாய்கிறது.இதை தடுக்கலாம்.
தற்போது இந்திய அரசியல் தலைவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு வலியுறுத்துகின்றனர்.இந்தியா ஒவ்வொரு முறை அமைதிக்கு அடித்தளம் போடும் போதும் இந்தியாவின் தசைகளை பாக் கிழித்துள்ளது.வாஜ்பாய் அவர்கள் பாக்கிற்கு அமைதி கரம் நீட்டிய போது கார்கில் வழியாக பாக் பதிலளித்தது.மன்மோகன் அவர்கள் கைநீட்டிய போது மும்பை தாக்குதல் வழியாக பாக் பேசியது.தற்போது பதன்கோட்,உரி என தொடர்ந்து வருகிறது.நீங்கள் ஒவ்வொரு முறை அமைதி என பேசும் போது அவன் இப்படி செய்யும் போது ஏன் மீண்டும் இதையே வலியுறுத்த வேண்டும்.
இந்தியா பாக் தீவிரவாத முகாம்கள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்த வேண்டும்.விளைவுகளை சந்திக்கலாம்.
இந்தியா பெற்றிருக்கும் இந்த இராணுவ வலிமையை பாக் பெற்றிருந்தால் ????
கருத்துகள் இல்லை