இராணுவத்தின் நான்கு கால் வீரர்கள்
இராணுவத்தின் நான்கு கால் வீரர்கள்
மனிதர்களுக்கு விசுவாசமான விலங்குகள் என்றாலே அது நாயினங்களை தான் குறிக்கும்.அந்த வகையில் மனிதர்களும் ஆதிதொட்டே நாயினங்களை பழக்கப்படுத்தி தத்தமது வீடு,காடு பாதுகாக்க பயன்படுத்தி வந்தான்.பாதுகாக்க மட்டுமல்ல அவைகளால் வேட்டையாடவும் முடியும்.
இதைக் கண்டு கொண்ட மனிதன் பழம் காலம் தொட்டே நாயினங்களை படைகளில் இணைக்கத் தொடங்கிவிட்டான்.அந்த வகையில் நமது இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் வேட்டை நாய்களை தங்களது படைகளில் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.
வேட்டை நாய்கள் மற்றும் அவற்றை இயக்கும் வீரர் இருவரும் தங்களுக்கிடேயே வெளிப்படுத்தும் அன்பு தான் போரில் வெற்றியடைய காரணமாகும்.போர் என்றால் துப்பாக்கியை தூக்கி கொண்டு ஓடுவதுமட்டுமல்ல,அது பல பரிமாணங்களை கொண்டது.
மார்ச் 1, 1960ல் மீரட்டில் போர் நாய்கள் பயற்சி மையம் முதல் முதலாக தொடங்கப்பட்டது.அங்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்டை நாய்களுக்கு முதல் மற்றும் நவீன பயிற்சிகள் வழங்கப்படுகிறது.கண்ணிவெடி,போதைப் பொருள்கள் கண்டுபிடிப்பது கற்று தரப்படுகிறது.
'Pashu Seva Ahmakam Dharm' அல்லது விலங்குகளுக்கு சேவை செய்வது எங்கள் வேலை என்பது தான் இந்த படைப் பிரிவின் நோக்கம்.
இராணுவத்தில் மட்டுமல்ல மத்திய துப்பாக்கி தாங்கிய பிரிவு,எல்லைப் பாதுகாப்பு படை ,கடற்படை மற்றும் விமானப் படைகளில் கூட நாய்கள் சேவையாற்றுகின்றன.
கருத்துகள் இல்லை