Breaking News

குளிர்கால சோதனையில் சிறப்பாக செயல்பட்ட DRDO ATAGS


குளிர்கால சோதனையில் சிறப்பாக செயல்பட்ட  DRDO ATAGS 

டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள புதிய ATAGS ஆர்டில்லரி துப்பாக்கி குளிர்கால சேதனையில் சிறப்பாக செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக முதல் தொகுதியாக 40 ஆர்டில்லரிகளை வாங்க இராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


அதே போல் கல்யானி நிறுவனம் ஒன்று இதே போல் ஒரு ஆர்டில்லரியை மேம்படுத்தியுள்ளது.இது தானியங்கியாக செயல்பட வல்லது.இவை இரண்டும் 155 mm 52 கேலிபர் துப்பாக்கிகள். அத நேரத்தில் சோதனையில் இருக்கும் னுஷ் ஆர்டில்லரி 155 mm 45 கேலிபர் வகை.

அதே போல் தற்போது அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க உள்ள  M777க்கு மாற்றாக இந்தியாவின் கல்யானி நிறுவனம் 155 mm 39 கேலிபர் துப்பாக்கியை மேம்படுத்தியுள்ளது.இது எடைகுறைந்த அதிக தூரம் சுடும் திறன் கொண்ட ஆர்டில்லரி ஆகும்.

இந்த 155mm 39 கேலிபர்  towed Howitzer துப்பாக்கிகளை எளிதாக இடம்மாற்றம் செய்ய முடியும்.வானூர்திகள் உதவியுடன் அதிக மலை உயரப் பகுதிகளுக்கு தூக்கி சென்று விரைவாக இயக்க முடியும்.இந்த நிறுவனத்தின் கணிப்பு படி உயர்மலைப் பகுதிகள் போர்முறைக்கு இந்திய இராணுவத்திற்கு மொத்தமாக 145 துப்பாக்கிகள் தேவைப் படும். அந்த நேரத்தில் இந்த 155/39 வகைகளை அளிக்க முடியும் என நம்புகிறத.அமெரிக்காவின் M-777க்கு மாற்றாக இந்த ஆர்டில்லரிகள் விலைகுறைந்த மாற்றாக இருக்கும் என கூறியுள்ளது.

இந்த ஆர்டில்லரிகள் எடை குறைவாக இருப்பது மிக அவசியம்.அதனால் தான் கல்யானி நிறுவனம் அமெரிக்காவின் மான்டஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து தனது துப்பாக்கிகளில் டைட்டானியம் மற்றும் அலுமினியம் சேர்ந்த உலோக கலவையை பயன்படுத்துகிறது.

இந்திய இராணுவச் செய்திகள்

கருத்துகள் இல்லை