ஐஎன்எஸ் சக்ரா நீர்மூழ்கியை பழுதுநீக்க 125கோடி செலவாகும்-இரஷ்யா
ஐஎன்எஸ் சக்ரா நீர்மூழ்கியை பழுதுநீக்க 125கோடி செலவாகும்-இரஷ்யா
இந்தியாவின் அணுஆற்றல் நீர்மூழ்கி சக்ரா சில நாட்களுக்கு முன் விபத்துக்குள்ளானது.இதில் சக்ராவிற்கு பழுது ஏற்பட்டுள்ளது.இதை நீக்க சுமார் 20மில்லியன் டாலர்கள் செலவாகும் என இரஷ்ய வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
விசாகப்பட்டிணம் துறைமுகத்தை அடைந்த போது நீர்மூழ்கியின் முன்பகுதி சேதமடைந்தது.இதில் நீர்மூழ்கியின் சோனார் பகுதி சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.இந்த முன்பகுதியை சரி செய்ய 20மில்லியன் டாலர்கள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தான் இந்தியா சொந்தமாக மேம்படுத்திய அரிகன்ட் நீர்மூழ்கியும் மனித தவறுகளால் சேதமடைந்து இன்னும் சீர் செய்யப்பட்டு வருகிறது.சில நாட்களுக்கு முன் நீர்மூழ்கி உள்ளே சென்ற நீர் வெளியேற்றப்பட்டு சில பைப் வேலைகள் முடிக்கப்பட்டன.ஆனால் அது மீண்டும் முழுச் செயல்பாட்டுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.
அதே போல் சக்ராவின் முன்பகுதியில் பொருத்த புதிய பேனல்களை இரஷ்யாவில் தயாரிக்க உள்ளதாக இரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் அதை தயாரிப்பதற்கான வசதிகள் இல்லையென்றும் கூறியுள்ளனர்.
சோனார் குவிமாடத்தின் 5x5 அடி பேனல் கொண்டுவரப்பட்டு விசாகப்பட்டிணத்தில் உள்ள தளத்தில் நீர்மூழ்கியில் பொருத்தப்படும்.
கருத்துகள் இல்லை