Breaking News

ஓமனில்உள்ள டாக்ம் துறைமுகத்தை இராணுவ ரீதியாக உபயோகிக்க அனுமதி பெற்றது இந்தியா


ஓமனில்உள்ள டாக்ம் துறைமுகத்தை இராணுவ ரீதியாக உபயோகிக்க அனுமதி பெற்றது இந்தியா 

மத்திய கிழக்கில் கால் பதிக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஓமனின் டாக்ம் துறைமுகத்தை இராணுவ ரீதியாகவும், தளவாட உதவிகளுக்காகவும் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது.இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் இந்தியக் கடற்படைக்கு சாதகமாக அமையும்.

பிரதமர் மோடி ஓமன் பயணத்தின் போது ஓமன் சுல்தான் சயித் கபூஸ் பின் செய்து அவர்களை சந்தித்தார்.இப்போது இரு நாடுகளுக்கிடையே இராணுவ உறவு அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.ஒந்த ஒப்பந்தத்தின் மூலம் அங்கு இந்தியக் கப்பல்களை பராமரிப்பு செய்ய முடியும்.

ஓமனின் தெற்கு கடற்படுகையில் அமைந்துள்ள இந்த துறைமுகம் அரபியான் மற்றும் இந்திய பெருங்கடலை நோக்கியபடி உள்ளது.மேலும் நமக்கு ஏற்றாற் போல் ஈரானின் சாபார் துறைமுகத்திற்கு அருகேயும் உள்ளது.இது இந்தியக் கடற்படைக்கு வலு சேர்க்கும்.


டாக்ம் துறைமுகத்தில் கடந்த காலத்தில் இருந்தே இந்தியாவின் நடவடிக்கைகள் அதிகம் தான்.கடந்த செப்டம்பரில் இந்தியா இந்த துறைமுகத்தில் ஒரு சிசுமர் வகை தாக்கும் நீர்மூழ்கியை தெற்கு அராபியன் கடற்பகுதியில் நிறுத்தியிருந்தது.அதே போல் ஐஎன்எஸ் மும்பை மற்றும் இரு பி8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களையும் ஈடுபடுத்தியிருந்தது.ஒமனுடன் உறவை அதிகரிக்கும் பொருட்டு இவைகள் அனுப்பப்பட்டிருந்தன.

மேலும் இரு நாடுகளின் மும்படைகளும் இணைந்து போர்பயிற்சி செய்வது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

மேலும் இந்திய நிறுவனங்கள் அந்த துறைமுகத்தில் சிறப்பு பொருளாதார மண்டத்தில் முதலீடு செய்துள்ளன.
மேலும் இந்தியாவிற்கு தேவையான எண்ணையை அங்கு சேமித்து வைப்பது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.


கருத்துகள் இல்லை