இந்தியா மாலத்தீவிற்கு படைகளை அனுப்பினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்-சீனா
இந்தியா மாலத்தீவிற்கு படைகளை அனுப்பினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்-சீனா
மாலத்தீவில் தற்போது நீடித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையை தீர்க்க இந்தியா தனது படைகளை அனுப்பினால் சீனாவின் எதிர் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி வரும் என சீனாவின் க்ளோபல்டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐநாவின் அனுமதி இல்லாமல் அங்கு படைகளை அனுப்புவது சரியாகாது.அதையும் மீறி படைகள அனுப்பினால் சீனா பொறுத்துக் கொண்டிருக்காது.இதுவரை சீனா மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிட்டது இல்லை அதற்காக புது டெல்லி இதை மீறினால் சீனா அமைதியாக உக்கார்ந்து கொண்டிருக்காது எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தியா எந்த வித இராணுவ நடவடிக்கைகள் எடுக்கும் முன் சீனாவின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
மாலத்தீவு விவகாரங்களில் இந்தியாவுடனான பிரச்சனையை நாங்கள் பெரிதாக்க நினைக்கவில்லை ஆனால் இந்தியா இராணுவ நடவடிக்கைகள் எடுத்தால் அது அமைதியை குலைக்கும் என கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை