இந்தியாவும்,5ம் தலைமறை போர்விமானமும்
இந்தியாவும் இரஷ்யாவும் இணைந்து தயாரிக்க வேண்டிய 5ம் தலைமுறை விமானத் திட்டம் இன்னும் பறக்கவில்லை. அதாவது 2010ல் முதன்மை வடிவம் தொடர்பான ஒப்பந்தமாகி 7 வருடங்களாவிட்ட பின்னும் இந்திய விமானப் படைக்கு வடிவம் தொடர்பான திருப்தியில்லா காரணத்தால் திட்டம் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது.இந்த திட்டம் விரைவில் கைவிடப்படலாம் என சில இராணுவ ஆராய்சியாளர்கள் கருதுகின்றன..
Su-57
5ம் தலைமுறை போர்விமானம் தயாரிப்பது என்பது உண்மையிலேயே ஒரு எளிய காரியம் அல்ல.அந்த இலக்கை அடைந்த ஒரே நாடு அமெரிக்கா மட்டும் தான்.ஏனெனில் கடந்த நான்கு தலைமுறைகளாக அவர்கள் தயாரித்த SR-71 முதல் F-35 விமானங்கள் வரை அவர்கள் பெற்ற படிப்பினைகளும் அனுபவங்களும் பெரிது.மற்ற எந்த நாடும் இவ்வளவு முயற்சி எடுத்ததில்லை.தற்போது புதிதாக இரஷ்யா(Pak fa) ,சீனா (J-20)ஆகிய நாடுகள் தாங்கள் 5ம் தலைமுறை விமானங்களை மேம்படுத்தியுள்ளதாக கூறி வருகின்றன. ஆனால் அவற்றின் திறன்கள் கேள்விக்குறியே!!!
F22 raptor
இந்த வரிசையில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.அதாவது இந்தியாவும் AMCA எனப் பெயரிடப்பட்ட 5ம் தலைமுறை விமானம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது.இந்த விமானம் 2030 வாக்கில் முழுச் செயல்பாட்டிற்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த விமானம் இந்திய விமானப்படையில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஜாகுவார்,மிக்-29, மிராஜ் ஆகிய விமானங்களுக்கு பதிலாக 2040வாக்கில் பயன்படுத்தப்படும்.இந்தியாவிற்கு 5ம் தலைமுறை விமானங்கள் தேவை என்பதால் தான் இரஷ்யாவுடன் கைகோர்த்தது.ஆனால் திட்டம் படுத்த படுக்கையாகிவிட்டது.இந்தியாவால் இரஷ்யாவை தவிர 5ம் தலைமுறை விமானம் இணைந்து தயாரிக்க வேறு நாடுகளை நாட முடியுமா?
F35 lightening
சீனா தனது ஜே-20 விமானத்தை படையில் சேர்த்துவிட்டது.இரஷ்யாவின் 5ம் தலைமுறை விமானமும் முடியும் தருவாயில் உள்ளது.
இந்தியா-இரஷ்யா கூட்டு தயாரிப்பு முயற்சியில் ஏன் தாமதம்?
Chinese J20
இருவரும் இணைந்து தயாரிப்பதால் இருவருமே தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது இந்தியா ஆனால் இரஷ்யாவாே இணைந்து தான் தயாரிக்கிறோம் தனித்தனியாக தொழில்நுட்பங்களை தயாரித்து விமானத்தில் இணைப்போம் ஆனால் இரஷ்யாவின் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என அறிவித்தது.
மேலும் இந்தியா தற்போது உள்ள என்ஜினை விட நல்ல அதிக திறன் கொண்ட என்ஜினை கேட்டு வருகிறது.இப்படியாக குழப்பங்கள் நீடித்து வருகிறது.
எதிரி நாடு 5ம் தலைமுறை விமானத்தை இணைத்து விட்டது நாமது விமானப்படை பரிதாபகரமான நிலையில் உள்ளது.முதல் தொகுதியாக அமெரிக்காவிடம் இருந்து 50 எப்-35ஏ வகை விமானங்களை தாமதிக்காமல் வாங்க வேண்டும்.
ஏனெனில் இரஷ்யா தற்போது தான் புதிய என்ஜினை மேம்படுத்தி வருகிறது.அது படையில் இணைக்கப்பட இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.Saturn izdeliye 30 என்ற அந்த என்ஜினை உருவாக்கிவருகின்றனர்.அது 2020ல் தொடர் தயாரிப்புக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய இராணுவச்செய்திகள்
கருத்துகள் இல்லை