Breaking News

நேபாளம் சீனாவின் கைகளில்..


நேபாள குடிமக்கள்  இந்திய இராணுவத்தில் சேருவதை நிறுத்த உள்ள நேபாளத் தலைவர்

நேபாளின் புதிய கம்யூனிஸ்ட் பிரதம மந்திரி சீனாவின்  $ 2.5 பில்லியன் ஹைட்ரோபவர் திட்டத்தை  திரும்ப தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.இந்தியாவின் நட்பு கருதி முன்னாள் தலைவர்கள் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டனர்.மேலும் நேபாளம் இந்தியாவை மட்டும் சார்ந்து இருக்காமல் பெய்ஜிங் உடன் தனது உறவை பலப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவின் பழைய நட்புகளை கருத்தில் கொண்டு நேபாளிகள் இந்திய இராணுவத்தில் இணைவது முதல் கொண்டு பல உறவுகளை புதுப்பிக்க உள்ளதாக கூறியுள்ளார்.இந்தியாவின் நேபாள உறவுகளின் நீண்டகால நடைமுறையில் இந்தியாவின்  ஆயுதப் படைகளில் நேபாளிகள் இணைவது  உட்பட அனைத்து இந்திய-நேபாள உறவுகளின் சிறப்பு விவகாரங்களையும் பரிசீலனை செய்வதற்கு அவர் விரும்புவதாக கூறியுள்ளார்.

நேபாளம் சீனாவின் "Belt and road initiative " திட்டத்தில் கடந்த மாதம் இணைந்தது.இதன் ஒரு பகுதியாக நேபாளத்தின் மத்திய மேற்கு பகுதியில் ஒரு ஹைட்ரோபவர் அணை அமைக்கும் ஒப்பந்தம் அந்த நாட்டு முன்னாள் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் சீனாவின் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இந்தியா நேபாள உறவில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றன.இதனால் அடுத்து வந்த நேபாள காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

தற்போது வந்துள்ள புது கம்யூனிஸ்ட் அரசாங்கம் அதை திரும்ப கையிலெடுத்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேபாளத்தின் சட்டம் புதுப்பிக்கப்பட்டு பெடரல் ரிபப்ளிக்காக மாற்றப்பட்டு வந்த முதல் தேர்தலில் கே.பி ஒலியின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாவோயிஸ்ட் கட்சி இணைந்து இடதுசாரிகள் முன்னனி அமைத்து இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.மேலும் சீனாவின் அறிவுறுத்தல்படி இந்த  இரு கட்சிகளும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"பெட்ரோல் பயன்படு நேபாளத்தில் அதிகமாக உள்ளது.இதை நாங்கள் இந்தியாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம்.இப்போது இந்த அணை கட்டினால் அது நேபாளத்திற்கு உதவியாக இருக்கும்" என நேபாள தலைவர்  கே.பி ஒலி கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நேபாள மக்களுக்கு சட்டத்தில் அதிகாரம் வேண்டும் என நேபாளத்திற்கு தேவையான பொருள்கள் செல்வதை இந்தியா நிறுத்தியது.இதை முறியடிக்க சீனாவிற்கு சென்று பல ஒப்பந்ததை போட்டு இந்தியாவின் செயலை முறியடித்தனர் கம்யூனிஸ்டுகள்.சென்று வந்த கையோடு நேபாள குடியரசு தலைவரின் இந்தியப் பயணத்தை தடுத்து நேபாள் தூதரை நாட்டிற்கு திரும்ப அழைத்தது நேபாள உறவில் உச்சம்.அதன் பின் வந்த நேபாள தேர்தலில் இந்திய எதிர்ப்பை பரப்பி மொத்த 275 தொகுதிகளில் 121 தொகுதில் வென்று ஆட்சி அமைத்துள்ளது கம்யூனிஸ்டு.

"சிறந்த நட்பு நாடு இந்தியா.சில தவறான சம்பங்கள் புரியாத்தன்னையின் காரணமாக நடைபெற்றுள்ளதாகவும்,இனி வரும் காலங்களில் இரு நாடுகளும் தங்கள் இறையாண்மைமை மதித்து நடக்கும்" எனவும் கூறியுள்ளார் ஒலி.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த சீனாவின் கைக்குள் செல்வதை தடுக்க இந்தியா பல முயற்சிகள் எடுத்தது.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேபாள தலைவர இந்தியாவிற்கு மூன்று முறை அழைத்தார்.வெளியுறவு துறை அமைச்சரை நேபாளம் அனுப்பினார்.ஒன்றும் நிகழவில்லை.நேபாளம் இந்தியாவை விட்டு தள்ளி போகிறது.

மாலத்தீவு ,இலங்கையை அடுத்து தற்போது நேபாளமும் இந்தியாவின் கைகளில் இல்லை.பூடானில் வடக்கு பகுதி டோகாலிமில் படைகளை குவித்து வைத்துள்ளது சீனா.பாகிஸ்தான் சீனாவின் கைக்கூலி.வங்கதேசத்திற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி முழுவதும் சீனா தான்.

"நாங்கள் ஒரு நாட்டை மட்டும் நம்பியோ அல்லது ஒரு ஆப்சனை மட்டுமே கொண்டிருக்க விரும்பவில்லை.சீனாவுடன் உறவை வலுப்படுத்துவோம் " என ஒலி கூறியுள்ளார்.

வரும் காலங்களில் திபத் ரெயில் ரோடை நேபாளம் வரை நீட்டிக்க உள்ளதாக தெரிகிறது.மேலும் சாலைகள் நேபாளம் மற்றும் திபத்தை இணைக்க உள்ளது.போரென்று வந்தால் இவற்றை சீனா எளிதாக பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த ரெயில்வே திட்டம் 2020க்குள் நிறைவேற்றப்பட உள்ளது.ரோடு டனல் என அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளது.

1950ல் போடப்பட்ட இந்திய நேபாள அமைதி ஒப்பந்தமும் ஒலியில் கண்களில் உள்ளது.கிட்டத்தட்ட 25,000 நேபாளிகள் இந்திய இராணுவத்தில் உள்ளனர்.மேலும் 20,000 பேர் துணை இராணுவம் மற்றும் காவல் படைகளில் உள்ளனர்.

நாம் நவீன உலகத்தில் உள்ளோம்.எங்களை நாங்கள் அதற்கேற்றாற் போல மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம் என ஒலி கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை