Breaking News

இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய சீனா


இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய சீனா



மாலத்தீவில் அரசியல் நெருக்கடியில் இருக்கும் வேளையில் 11 சீனப் போர்க்கப்பல்கள் கிழக்கு இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவு பிரச்சனையை  புதுடில்லி மற்றும் பெய்ஜிங் டிப்ளோமட் பேச்சுவார்த்தைகள் மூலம் தனதாக்க போட்டியிடுகின்றன. இந்நிலையில் சீனக் கப்பல்கள் தீவு நாடான மாலத்தீவுக்கு செல்லும்  அடையாளங்கள் இல்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



நாசகாரி போர்க்கப்பல்கள் ,பிரைகேட் ரக கப்பல்கள், ஒரு நீர்நில போக்குவரத்து கப்பல்,மற்றும் மூன்று சப்போர்ட் டேங்கர் கப்பல்கள் என ஒரு கப்பல் குழுவே வந்துள்ளதாக சீன இணையதளமான  sina.com.cn செய்தி வெளியிட்டிருந்தது.இந்தக் கப்பல்கள் மாலத்தீவிற்கு செல்வதாக எந்த  செய்திக் குறிப்பும் இல்லை.

ஆனால் இந்தியப் பெருங்கடல் தற்போது அமைதியாக இல்லை என மட்டும் அதில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
“பத்து நாட்களுக்கு முன்பு  ‘Navy Blue 2018A’  தொலைதூர கடல் பயிற்சி என்ற பெயரில் சீனக கடற்படை Strait of Indonesiaவை கடந்ததாகவும் அதில் ஐந்து முன்னனி போர்க்கப்பல்கள் கிழக்கு இந்தியக் கடலில் நுழைந்தது ,” என செய்தி வெளியிடப்பட்டிருந்தது.



மேலும் இந்திய பெருங்கடல் பகுதி அமைதியின்றி காணப்படுவதாகவும் , மாலத்தீவு பிரச்சனையை தீர்க்க இந்தியாவின் உதவியை மாலத்தீவு மறுத்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.


ஒரு கடற்படை மூத்த அதிகாரி கூற்றுப்படி இந்தியக் கடற்படை சீனப் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை கணித்து வருவதாகவும் அவை மாலத்தீவு நோக்கி செல்வதற்கான தடயம் இல்லை எனக் கூறியுள்ளார்.மேலும் கூறுகையில் தற்போது அவை மாலத்தீவில் இருந்து 2000 நாட்டிகல் மைல் தொலைவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பத்து நாட்களுக்கு முன் ஐந்து சீனக் கப்பல்கள் கிழக்கு இந்தியக் கடற்பகுதிக்குள் நுழைந்ததை இந்தியக் கடற்படை பார்த்ததாகவும் தற்போது அவை கிழக்கு சீன கடலுக்கு திரும்பிவிட்டதாவும்  அவர் தெரிவித்துள்ளார்.


மூன்று முதல் நான்கு சீனக் கப்பல்கள் ஏடன் வளைகுடா பகுதியில் இருப்பதாகவும் அவை கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.இந்தக் கப்பல்கள் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.



மாலத்தீவு பிரச்சனைக்கு உள்நாட்டு தீர்வே சிறந்தது எனவும் மற்ற நாடுகளின் தலையீடை சீனா அனுமதிக்காது எனவும் சீனா தொடர்ந்து கூறி வருகிறது.சீனா மாலத்தீவில் அதிக அளவு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்தில் மாலத்தீவு கையழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய கடற்பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ நடவடிக்கை பற்றியும் அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் திபத் பகுதியில் சீனா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை அப்கிரேடு செய்துள்ளது.அது தொடர்ச்சியாக தனது ஜே-10 மற்றும் ஜே-11 விமானங்களை கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவிற்கென்றே தொடங்கப்பட்ட சிறப்பு மலைப் போர் செய்யக்கூடிய சீ்னாவின் மேற்கு தியேட்டர் கமாண்ட் தான் இந்தியா போரில் ஈடுபட்டால் முதல் பொறுப்பு.


இந்த மேற்கு பகுதியின் வான் பகுதி முதல்கொண்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ளதாக சீன இராணுவ வல்லுநர் சோங் சோங்க்பிங் கூறியுள்ளார்.
இந்தியாவின் மூன்றாம்தலைமுறை விமானங்களை கருத்தில் கொண்டு சீனா அதன்  3.5ம் தலைமுறை விமானங்களை இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக நிலைநிறுத்தி உள்ளதாக சோங் கூறியுள்ளார்.

மேலும் மேற்கு கட்டளையக பகுதியில் சீனா தொடர்ந்து வலிமையை கூட்ட உள்ளதாகவும் கூறியுள்ளார்.




கருத்துகள் இல்லை